நித்தியானந்தா மதுரை ஆதீன மடத்திற்குள் இருக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மதுரை ஆதீன மடத்திற்குள் நுழைந்து வழிபாடு நடத்த முயன்ற ஆதீன மீட்புக் குழுவினரை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.மதுரை ஆதீன மடம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. மதுரை ஆதீனம் எடுத்த முடிவால் இந்து அமைப்புகள் கொந்தளித்துள்ளன. மதுரை ஆதீனத்தை மீட்கக் கோரி ஒரு மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை கண்ணன் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் இன்று மதுரையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்தில் மாநாடு நடத்தினர். அதன் பின்னர் நித்தியானந்தாவை மதுரை ஆதீன மடத்திலிருந்து வெளியேற்றக் கோரி மதுரை மேலமாசி வீதியில் ஆதின மீட்புக்குழுவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதன் பின்னர் ஆதினத்தின் உள்ளே நுழைந்து வழிபாடு நடத்த வர்கள் சென்றனர். இதையடுத்து ஆதீன மடத்தின் முன்புறம் மற்றும் பின்பக்க கதவுகள் மீடப்பட்டன.
நித்தியானந்தாவின் ஆதரவாளர்களை மட்டுமே உள்ளே அனுமதித்தனர். பதட்டமான சூழ்நிலை நிலவியதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் நெல்லை கண்ணன், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், தேவர் தேசிய பேரவை தலைவர் திருமாறன் தலைமையில் பெரும் திராளனோர் மதுரை ஆதீன மடத்திற்கு வந்தனர். ஆனால் அவர்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்று நித்தியானந்தாவின் ஆட்கள் கூறி விட்டனர்.
இதையடுத்து மடத்துக்கு வெளியே குழுமியபடி அனைவரும் கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்தப் போராட்டம் காரணமாக மதுரை ஆதீனம் மடம் அமைந்துள்ள பகுதியில் பெரும் பரபரப்பும் பதட்டமும் நிலவியது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !