Headlines News :
Home » » தேசியத் தலைவரின் இருப்பை அறியும் முயற்சி!

தேசியத் தலைவரின் இருப்பை அறியும் முயற்சி!

Written By Siva on Tuesday, March 13, 2012 | 3:53 PM

இது ஒரு பல்கூட்டு முயற்சி. முடிந்துபோய்விட்டதாக சிறீலங்காஅரசு உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னரும் அந்த இயக்கத்தின்மீதான தமிழ் மக்களின் நம்பிக்கை கொஞ்சம்கூட குறைந்து போய்விடவில்லை. அந்த இயக்கத்தின் நடவடிக்கைகள் கடந்த 34 மாதங்களாக பகிரங்கமாக எதுவுமே நடைபெறாத போதும் இன்னும் தமிழ் மக்கள் அந்த இயக்கத்தின்மீது வைத்திருக்கும் நம்பிக்கை சிறிதளவேனும் குறைந்ததாக இல்லை. இன்றும்கூட அந்த இயக்கத்தின் மீள்வருகையையும் அதன் போராளிகளின் முகங்களையுமே தமிழ் மக்கள் வழிமேல் விழிவைத்து பார்த்து இருக்கின்றார்கள். இந்த உளவியல் உறுதியை என்றுமே கணக்கெடுக்கவும் கணித்துவிடவும் ஆளும் தரப்பால், ஆக்கிரமிப்பாளர்களால் முடிந்ததில்லை. முடிவதுமில்லை. இதற்கு ஒரு முடிவு காணும் முயற்சியாக சில நடவடிக்கைகளை, சில காட்சிப்படுத்தல்களை செய்தே ஆகவேண்டிய கட்டாயத்துக்குள் சிறீலங்கா இனவெறி அரசும், அதனுடைய பங்காளிகளான பிராந்திய வல்லாதிக்கமும் தள்ளப்பட்டுள்ளது. மேற்கு நாடுகளுக்கும் இதனை ஒத்த தேவைகளும் இருக்கின்றன. மேற்கின் கதவுகளை இப்போது ஜனநாயக முறைப்படி தட்டிக்கொண்டிருக்கும் தமிழர்கரங்கள், அந்த வேண்டுகோள்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டால் இதே மென்முறையிலேயே தொடர்வார்கள் என்பதற்கு எந்தவொரு உறுதிப்பாடும் இல்லை. மேற்குலகுக்கும் இந்த உணர்வை சிதைக்கவேண்டிய கட்டாயமும் அவசியமும் மிக அதிகமாகவே தேவை. இவர்களுடைய தேவைகைள் ஒருபுறம் இருக்க. இன்னொரு பக்கத்தில் ஊடகத்தின் தேவை என்றும் ஒன்றுள்ளது. ஊடகம் தன்னை நடுநிலையாளனாக காட்டுவதற்காக தமிழர் தரப்பையும் குற்றஞ்செய்ததாகவும் காட்டவேண்டிய தேவை உள்ளது. அப்போதுதான் அவர்களுக்கு நடுநிலை ஊடகம் என்ற நற்சான்றிதழ் (?) கிடைக்க வாய்ப்பிருக்கும். இது முழுக்க முழுக்க ஊடகம் தன்னை தக்க வைத்துக்கொள்ளவும் தன்னுடனான போட்டி தொலைக்காட்சிகளை வென்றுவிடவும் செய்யும் பலவித முயற்சிகளில் ஒன்று. இசைப்பரியாவின் படுகொலையை கடந்தமுறை காட்சிப்படுத்திய தொலைக்காட்சி அதன்போது இசைப்பிரியாவின் உயிரற்ற உடலை காட்டியதுடன் அடுத்த காட்சியில் இசைப்பிரியா உயிருடன் இருந்த காலத்தின் காட்சி ஒன்றை ஒளிபரப்பும்போது இசைப்பிரியா கரும்புலி உடையுடன் பாடல் பாடுவதாகவே காட்டி இருந்தது. இசைப்பிரியா புடவையுடன் செய்தி வாசிக்கும் காட்சிகளும், சாதாரண பெண்போல இருக்கும் காட்சிகளும் ஏராளம் இருக்கும்போது கரும்புலி உடையுடன் காட்சிப்படுத்தவேண்டிய தேவை என்ன? எந்தவொரு மேற்கின் ஊடகமும் முழுக்க முழுக்க எமக்கும் எமது சுயநிர்ணய உரிமை போராட்டத்துக்கும் ஆதரவானதாக இருந்ததில்லை. இருக்கபோவதுமில்லை. சில வேளைகளில் எமக்கு ஒரு சில மனித உரிமை தளங்களில் உதவக்கூடியவர்களாக இருப்பார்கள். அவ்வளவுதான். அத்துடன் தலைவரின் இருப்பை பற்றிய எந்தவொரு தகவலும் இன்னும் வெளிவராத நிலையில் தலைவரை பற்றிய கீழ்தரமான காட்சிப்படுத்தலை வெளிப்படுத்துவதன் மூலம் அதற்கு மறுப்பாக தலைவரின் இருப்பு சம்பந்தமான ஒளிப்பதிவு ஏதும் வெளிவரக்கூடும் என்றும் முகர்ந்து திரியும் வல்லாதிக்க புலனாய்வின் முயற்சிதான் தலைவரை பற்றிய பிழையான தகவல் கசிவுகள். இந்த ஒரு காட்சிப்படுத்தலின் விளைவாக ஒரு தலைகீழ் மாற்றத்தை எதிர்பார்த்து பல சக்திகள் காத்திருக்கின்றன. வரப்போகும் காட்சிப்படுத்தலை பார்த்துவிட்டு எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு முகம்புதைத்து கிடக்கப்போகின்றோமா? இல்லை. நந்திக்கரை ஓரத்தில் 2009 மே மாதத்தில் சிங்களஅரசு காட்டி எதனை சாதிக்க நினைத்ததுவோ அதனை இப்போது சில புலம்பெயர் தமிழ் பினாமிகளை வைத்து தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்து அதன் மூலம் மீண்டும் சாதிக்க எடுக்கும் முயற்சி என்று புரிந்துகொண்டு எழப்போகின்றோமா?
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Tamil Video Songs

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. New Indian-videos - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger